அதானி குழும சந்தை மதிப்பு ரூ. 2.37 லட்சம் கோடி சரிந்தது

சென்னை: அதானி குழும நிறுவன பங்குகள் விலை அதிகபட்சமாக 20 சதவீதம் வரை சரிவு, அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்க விலை 19.6 சதவீதம் வீழ்ச்சி, பங்குகள் விலை கடும் சரிவால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2 நாட்களில் ரூ. 2.37 லட்சம் கோடி சரிந்துள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவங்களின் பங்குகள் விலை தொடர் சரிவை சந்தித்து வருகின்றன.

ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தபிறகும் அதானி குழும நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன, அதானி குழும நிறுவன பங்குகள் விலை அதிகபாசமாக 20 சதவீதம் வரை சரிந்து காணப்படுகிறது.

கடந்த 1 ஆண்டு காலமாக அதானி நிறுவனங்களுடைய பங்குகள் இருமடங்குக்கு மேல் அதிகரித்ததை நம்மால் காணமுடிந்தது, கடந்த ஆண்டு இதே பிபர்வரி மாதம் ரூ. 1,670 இருந்த பங்கு இப்பொழுது ரூ. 3000க்கு மேல் வர்த்தகம் ஆகிக்கொண்டு இருக்கிறது. இந்த இருவது சதவீத விழுச்சிக்கு பிறகும் 100 சதவீதம், சென்ற ஆண்டு ஒப்பிட்டு பார்க்கையில் அதிகரித்து  உள்ளது என்று பொருளாதார நிபுணர் நாகப்பன் கூறியுள்ளார்.    

Related Stories: