ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையை தொடர்ந்து 2-வது நாளாக அதானி குழும பங்குகள் விலை சரிவு

டெல்லி: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பங்கு விலை 19.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 19.1 சதவீதம், அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை 15.8 சதவீதம் சரிந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையை தொடர்ந்து 2-வது நாளாக அதானி குழும பங்குகள் விலை சரிந்துள்ளது.

*ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்; அதானி குழுமம்

“அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது; எங்கள் வீழ்ச்சியில் இருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது; அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்”  என அதானி குழுமத்தின் தலைமை சட்ட ஆலோசகர் ஜதின் ஜலுந்த்வாலா தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருவதாக குற்றம்சாட்டி அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச், அறிக்கை வெளியிட்ட நிலையில், அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.97,000 கோடி சரிந்துள்ளது.

*முடிந்தால் வழக்கு தொடர்ந்து பார்க்கட்டும் என ஹிண்டன்பர்க் சவால்

ஹிண்டன்பர்க்-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த அதானி குழுமத்தின் எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், எங்களின் விரிவான அறிக்கை இருப்பதாகவும், அதற்கு எதிரான எந்தவொரு சட்ட நடவடிக்கையும் தகுதியற்றதாகவே இருக்கும் எனவும் ஹிண்டன்பர்க் பதிலளித்துள்ளது.

அதானி குழுமம், அமெரிக்காவில் முடிந்தால் வழக்கு தொடர்ந்து பார்க்கட்டும் என ஹிண்டன்பர்க் சவால் விடுத்துள்ளது. ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில் 88 கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் அதற்கு அதானி குழுமம் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

பங்குகள் விலை கடும் சரிவால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2 நாளில் ரூ.2.37 லட்சம் கோடி இழப்பு

Related Stories: