சிதம்பரம் அருகே விமரிசையாக நடந்த கன்னித் திருவிழா: சிறியவர் முதல் பெரியவர் வரை கும்மி நடனமாடி உற்சாகம்

கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் கன்னித்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி கன்னித் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் களையிழந்து காணப்பட்ட கன்னித் திருவிழா நேற்றைய தினம் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு தெரு முனையிலும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கன்னி சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பின்னர், சிலைகளை இளைஞர்கள், இளம் பெண்களும், ஊர்வலமாக தலையில் தூக்கிச் சென்று ஊர் எல்லையில் உள்ள வெள்ளாற்றில் கரைத்து வழிபட்டனர். அப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கும்மி நடனமாடி மகிழ்ந்தனர். திருமணமாக இளைஞர்கள் இளம்பெண்கள் இந்த விழாவில் பங்கேற்று பூஜை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 300 ஆண்டுகளாக நடைபெறும் இந்த திருவிழா சமூக நல்லினகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் ஊர் மக்கள்  நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.  

Related Stories: