ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி மகேஷ் தினேஸ்வரி அமர்வில் பழனிசாமி தரப்பில் முறையிடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் சார்பில் வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என பழனிசாமி கூறினார். பன்னீர்செல்வம் தரப்புக்கு உங்களது கோரிக்கையை தெரிவித்து விட்டீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Related Stories: