தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள்: ஓபிஎஸ் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார். குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது.  

அந்த வகையில் சமூகநீதிக்காக போராடிய மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றனர். பிரபல பிண்ணனி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது, சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் பத்ம பூஷண் விருதினைப் பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், இவர்கள் அனைவரும் மேலும் பல விருதுகளை பெற எனது நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: