பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட கேரள இளைஞர் கைது: போலீசார் விசாரணை

கேரள: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை திரையிட கேரள இளைஞர் காங்கிரஸ்க்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 2002 ஆண்டு கொட்ட ரயில் எதிர்ப்பு சம்பவத்தை அடுத்து நடைபெற்ற குஜராத் வன்முறை சம்பவங்கள் குறித்து இந்திய THE MODI QUESTION என்ற ஆவணப்படத்தை பிபிசி செய்தி நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட ஒன்றிய அரசு தடைவிதித்துள்ளது, அதனை மீறி டெல்லி, ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா பல்கலைக்கழகம் இந்த ஆவணப்படத்தை திரையிட முயன்றதாக 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசு தடைசெய்தலும் எதிர் கட்சிகள் டெல்லி, தெலுங்கானா, மேற்குவங்கம், ஆகிய மாநிலங்களில் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கேரளாவில் திருவனந்தபுரத்தில் நேற்று மாலை கேரள இளைஞர் காங்கிரஸ் சார்பில் மோடி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற பாஜகவினர்க்கும் இளைஞர் காங்கிரஸ் நிருவாகிகளாகும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியுள்ளது.    

Related Stories: