சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பெண் உயிரிழப்பு

சென்னை: அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது கட்டடடம் விழுந்ததால் அண்ணாசாலையில் பரபரப்பு எப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே சுவர் இடிக்கும் பணியின்போது இடிபாடுகளில் விழுந்து வங்கி ஊழியர் உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் மீட்பு பணியில்  தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். எப்பவும் பரபரப்பாக இயங்கி கொண்டி இருக்கும் அண்ணாசாலையில் பழமையான பயன்படுத்தப்படாமல் அதிகமான கட்டிடங்கள் உள்ளது. அந்த பழைய கட்டிடங்களை நேற்று இடிப்பதற்கு தயாராக வைத்துள்ள நிலையில் இன்று காலை தானாகவே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பழைய கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் அங்கு நடந்து சென்ற பெண் மீது அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த கட்டிட விபத்தினால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 1 கி.மீ தூரம் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. கட்டிடடத்தின் உரிமையாளர் யார் என்றும் கட்டிட விபத்து நடந்ததையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: