காட்டுமன்னார் கோவிலில் இயற்கை சீற்றத்தால் நேர் பயிர் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம்

கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் இயற்கை சீற்றத்தால் நேர் பயிர் விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம்காட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், வீராணம் ஏறி ஆகியவற்றின் மூலம் பாசனம் பெற்று விவசாயப்பணிகள் நடைபெறுகிறது.

நெல் சாகுபடி முடிந்த பிறகு விவசாயிகள் உளுந்து, பயிர் சாகுபடி செய்து வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக மழை பெய்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு விவாசிகள் நெல் அறுவடைக்கு பிறகு மாற்று பயிர் செய்யும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டனர், இதன் படி கருப்பெரி, அசனி, எய்யனுர், அரன்மொழி தேவன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பருத்தி சாகுபடியில் அவர்கள் முனைப்பு காட்டியுள்ளனர்.

பருத்தி சாகுபடியில் 1 ஏக்கருக்கு ரூ. 20,000 செலவாகிறது ஒரு பருத்தி 8,000த்தில் இருந்து 10,000 ரூபாய் வரை விற்பனை ஆனது. இதனால் ஏக்கருக்கு ரூ. 50,000 லாபம் கிடைப்பதாக விவாசிகள் தெரிவித்தனர். நெல் அறுவடைக்கு பின்பு பருத்தி லாபம் ஈட்டுவது, விவாசிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Related Stories: