கடந்த ஆண்டில் 93.2 சதவீத ரயில்கள் நேரம் தவறாமல் இயக்கப்பட்டுள்ளன: ரயில்வே பொது மேலாளர் பேச்சு

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். பின்னர் ஆர்.என்.சிங் கூறுகையில், ‘‘கடந்த 2022-23ம் ஆண்டில் தெற்கு ரயில்வே வருவாய் பாதுகாப்பு திட்டம் வகுத்தல், பயணிகள் வசதி என அனைத்து துறையிலும் ஆரோக்கியமான வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த ஆண்டு தெற்கு ரயில்வே மொத்தத்தில் 47.46 சதவீதம் சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட ஒப்பிடுகையில் 93.2% நேரம் தவறாமல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக முக்கியமான ரயில் நிலையங்களை நவீன வசதியுள்ள உலக தரத்திற்கு மேம்படுத்தும் வகையில் எழும்பூர், காட்பாடி, புதுச்சேரி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, எர்ணாகுளம், கொல்லம் மற்றும் எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களுக்கான ஒப்பந்தங்கள் தெற்கு ரயில்வே மூலம் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேயில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தென்னக ரயில்வே கணிசமான பங்களிப்பு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு நாங்கள் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த ஆண்டு பல பணிகளை சிறப்பாக செய்துள்ளோம்.

அதில், குறிப்பிடும்படி கூற வேண்டும் என்றால் 2022 முதல் சென்னை மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. மிஷன் 100% ரயில்வே மின்மயமாக்களின் ஒரு பகுதியாக கடந்த 2002-23ம் ஆண்டு சதன் ரயில்வேயில் 188 கிலோமீட்டர் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. சமீபத்திய சர்வதேச பாதுகாப்பு தரத்திற்கு இணங்க அதிநவீன எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டம் 21 ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே சொத்துக்களையும், பாதுகாப்பையும் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் ஆர்பிஎப் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டதில் 634 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

மற்றும் ரூ.33 கோடி மதிப்புள்ள அவாலா பணம் தங்கம் மற்றும் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டதில் 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ஓடிப்போன 2205 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் மற்றும் 62 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பயணிகளிடமிருந்து திருடப்பட்ட மற்றும் அவரது உடைமைகள் ரூ.24 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னக ரயில்வேயில் ஒவ்வொரு அதிகாரி கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என அர்ப்பணிப்போடு பணியாற்ற கூடிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.

Related Stories: