மூவரசம்பட்டு ஊராட்சியில் தடையின்றி குடிநீர் விநியோகம்: கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆலந்தூர்: மூவரசம்பட்டு ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் ஜி.கே.ரவி தலைமை வகித்தார். துணை தலைவர் எம்பி.பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூடத்தில், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட சாலை பணி, மழைநீர் கால்வாய் பணி, தெரு விளக்கு பணி போன்றவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வழங்கும்படியும், குப்பைகளை சேரவிடாமல் உடனுக்குடன் அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும், கால்நடை வளர்ப்போர் சாணங்களை கால்வாயில் கொட்டுவதையும், சாலைகளில் சேமிப்பதையும் தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி பேசுகையில், ‘‘கிராம சபை கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தெருவிளக்கு, குடிநீர் வசதி போன்ற புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கும், குப்பை மக்காத குப்பை போன்றவற்றை பிரிக்க கொடுத்த பிளாஸ்டிக் கூடைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள  ஒத்துக்க வேண்டும்,’’ என்றார்.

Related Stories: