போலீசார் பயன்படுத்திய வாகனம் ரூ.1.40 கோடிக்கு ஏலம்

சென்னை: சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு ேமாட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்படி கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலம் விடப்பட்டது.  அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி ஒரு இருசக்கர வாகனம், 104 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என மொத்தம் 114 வாகனங்கள் ரூ.37,51,441 தொகைக்கு ஏலம் விடப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி 80 பைக்குகள், 74 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு, 141 வாகனங்களுக்கான ஏலத்தொகை ரூ.50,32,500 பெறப்பட்டது.

மேலும், கடந்த டிசம்பர் 19ம் தேதி 220 பைக்குகள், 66 இலகுரக வாகனங்கள் என 286 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டு அதில் 272 வாகனங்களுக்கான ஏலத்தொகை ரூ.53.10 லட்சம் பெறப்பட்டது. அந்த வகையில் சென்னை மாநகர காவல்துறையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 3 தவணைகளில் மொத்தம் 301 பைக்குகள், 254 இலகுரக வாகனங்கள், 9 கனரக வாகனங்கள் என மொத்தம் 554 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. அதில் 527 வாகனங்களின் ஏலத்தொகையாக 1 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 941 ரூபாய் பெற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: