பரங்கிமலை ரயில் நிலையத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த காதல்ஜோடி: காதலி சாவு; காதலன் உயிர் ஊசல்

சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கட்டிப்பிடித்த நிலையில் காதல் ஜோடி ஒன்று ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் காதலி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், காதலன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை, பரங்கிமலை ரயில்நிலையத்திற்கு நேற்று இரவு 8.15 மணியளவில் ஒரு மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது காதல்ஜோடி ஒன்று கட்டிப்பிடித்தபடி நிலையில், ரயில் முன்பு பாய்ந்தனர். இதில் இளம்ெபண் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காதலன் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினர். தகவலறிந்து மாம்பலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதலனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து காதல்ஜோடிகள் வைத்திருந்த செல்போன்களை போலீசார் தேடினர். அப்போது செல்போன் சுக்கு நூறாக உடைந்து கிடைந்ததை கைப்பற்றி அவர்கள் யார் என்று விசாரணை நடத்தினர். அதில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காதலன், மடிப்பாக்கம் பகுதியை  சேர்ந்த இளங்கோ (20). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம்  ஆண்டு பட்டபடிப்பு படித்து வந்தது தெரியவந்தது. உயிரிழந்த காதலிக்கு 19  வயது என தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டன.

Related Stories: