மகனை நினைச்சு பெருமைப்படுறேன்

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். பேசுகையில், ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னாள் எனது மகன் திருமகன் ஈவெரா என கூறப்பட்டவர். தேர்தல் முடிந்து அவர் ஆற்றிய பணிகள் மூலம் தற்போது எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் என கூறுவது எனக்கு பெருமையாக உள்ளது.

இதற்கு காரணம் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த குறுகிய காலத்தில் நிறைய பணிகளை செய்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் எனது மகன் திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணியை தொடர எனக்கு காங்கிரஸ் சின்னத்தில் வாக்கு சேகரித்து, வெற்றியை பெற்று தாருங்கள்’’என்றார்.

Related Stories: