பாஜ கொடி கம்பத்தில் தேசியக்கொடி

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தாமரை சின்னத்துடன் பாஜ கொடிக்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு, அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தேசியக் கொடியை ஏற்றி உள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அதிர்ச்சி அடைந்தனர். தேசியக் கொடியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தாமரை சின்னத்துடன் உள்ள கட்சி கொடி கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி பாஜவினர் அவமதித்துவிட்டனர் என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. இதுபற்றி உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திர போராட்ட வீரர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: