திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ2 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியலில்  பக்தர்கள் ரூ.2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869ஐ  காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் எண்ணுவது வழக்கம். அதன்படி ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு 7 மணி வரை நடந்தது. கோயில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடந்த இப்பணியில் தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதில் ரூ.2 கோடியே 71 லட்சத்து 96 ஆயிரத்து 869 மற்றும் 320 கிராம தங்கம், 2,684 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றை  உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அதேபோல், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முதன்முறையாக கோயில் இணையதளத்தில் (யுடியூப்) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை, பக்தர்கள் பார்வையிட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: