என்எல்சி நிறுவனத்தில் வரும் 4 ஆண்டுகளில் 4,036பேர் ஓய்வு; பணியில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிட்டுமா?.. மக்கள் அச்சம்..!

டெல்லி: என்எல்சி நிறுவனத்தில் வரும் 4 ஆண்டுகளில் 4,036பேர் ஓய்வு பெற உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. என்எல்சியில் 4 ஆண்டுகளில் எத்தனைபேர் ஓய்வு என கண்ணபிரான் என்பவர் எழுப்பிய கேள்விக்கு ஆர்டிஐ பதிலளித்துள்ளது. அதில்; என்எல்சியில் தற்போது 11 ஆயிரத்து 110 பேர் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். வரும் 4 ஆண்டுகளில் 4,036பேர் ஓய்வு பெற உள்ளனர். அதில்; 2023ல் நிர்வாகம் சார்ந்த 231 பேர், மேற்பார்வையாளர்கள் 5 பேர், நிர்வாகம் சாராத 634 பேர் என 870 பேர் ஓய்வு பெற உள்ளனர். 2024ல் நிர்வாகம் சார்ந்த 278 பேர், மேற்பார்வையாளர்கள் 10 பேர், நிர்வாகம் சாராத 732பேர் என 1,020 பேர் ஓய்வு பெற உள்ளனர்.

2025ல் நிர்வாகம் சார்ந்த 298 பேர், மேற்பார்வையாளர்கள் 8 பேர், நிர்வாகம் சாராத 850பேர் என 1,156 பேர் ஓய்வு, 2026ல் நிர்வாகம் சார்ந்த 226 பேர், மேற்பார்வையாளர்கள் 26 பேர், நிர்வாகம் சாராத 738 பேர் என 9,90 பேர் ஓய்வு என அடுத்த 4 ஆண்டுகளில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் மொத்தம் 4,036 பேர் ஓய்வுபெற உள்ளனர். 4,036 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தமிழர்களுக்கு நெய்வேலி என்எல்சியில் முன்னுரிமை அளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

Related Stories: