இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அணிகளில் ஓபிஎஸ்சுக்கு தனியரசு ஆதரவு: பொதுச்செயலாளராக வந்தால் அதிமுகவுக்கு ஆபத்து

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனித்தனி அணிகளாகக் களமிறங்குகின்றனர். இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் 2 முறை எம்எல்ஏவாக வெற்றிபெற்றவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. இவர், கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு நேற்று வந்து தனது ஆதரவை தெரிவித்தார்.

பின்னர் வெளியில் வந்த தனியரசு நிருபர்களிடம் கூறியதாவது:

  அதிமுக நலன் கருதி, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி இந்த இரட்டை தலைமை, இன்னும் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி இவர்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பதற்காக நாங்கள் எல்லாம் காத்திருக்கிறோம். ஆனால், அதிமுகவில் இருந்த இரட்டை தலைமையிலும் இப்படி ஒரு பிரிவு, சிக்கல் வருவது அதிமுகவுக்கு மீண்டும் சரிவை தரும். அது நாட்டு மக்களின் நம்பிக்கை, ஆதரவை இன்னும் பலவீனப்படுத்தும் என்ற அடிப்படையில் தான் ஒபிஎஸ்சை சந்தித்து பேசினேன். அவர் என்னிடம் கூறும்போது, ‘இந்த முறை நான் உறுதியாக இருக்கிறேன்.

அதிமுக ஒற்றுமைக்காக ஒற்றை தலைமை என்கிற முழக்கத்துக்கு நான் எப்போதும் இசைவு தெரிவிக்க மாட்டேன்’ என்றார்.   எனவே, இந்த பிரச்னை சம்பந்தமாக நான் சசிகலா மற்றும் டிடிவி.தினகரை சந்தித்து பேச உள்ளேன். இப்போதும் ஓபிஎஸ் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தால், எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகார போக்கு அதிமுகவை வலிமை இழக்க செய்துவிடும்.  பழிவாங்கும் போக்கு, சதி செய்கிற சூழ்ச்சி செய்கிற நேர்மையற்ற தன்மை தான் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது. எனவே எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை தலைமையாக உருவெடுப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: