சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் செல்வக்குமார் என்ற பரலோகன் (35). இவர், இந்த மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த இளம்பெண், மயக்க நிலையில் இருந்தபோது பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் உறவினர்கள், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவான ஊழியரை தேடி வருகின்றனர்.

Related Stories: