சிறுமி பலாத்காரம் போலீசுக்கு பயந்து விவசாயி தற்கொலை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கர்ணப்பள்ளியை சேர்ந்தவர் முனிரத்தினம் (39), விவசாயி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் முனிரத்தினம் நெருங்கி பழகியுள்ளார். அந்த சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது முனிரத்தினம், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுபற்றி பெற்றோர் விசாரித்த போது, முனிரத்தினம் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. புகாரின்படி ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதனை அறிந்த முனிரத்தினம், தன்னை போலீசார் கைது செய்துவிடுவார்கள் என பயந்து, நேற்று முன்தினம் கர்னூர் வனப்பகுதியில், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: