அங்க அடிச்சுக்குறாங்க... இங்க தீர்மானம் போடுறாங்க...

ஈரோட்டில் அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் இடைத்தேர்தல் பணிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட செயலர் கோவிந்தன், மேற்கு மாவட்ட செயலர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் நிறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும்.  இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிகார சண்டையால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் அணி தீர்மானம் போட்டுள்ளது வேடிக்கையாக உள்ளது.

Related Stories: