கூட்டணியா? உஷ்ஷ்ஷ்... தெர்மாகோல் புகழ் ஓட்டம்

மதுரையில் அதிமுக சார்பில், மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவினர் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து, தியாகிகளின் நினைவுகளை போற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செல்லூர் ராஜூவிடம், நிருபர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு அவர், ‘‘அதுபற்றி இப்போது பேச வேண்டாம்’’ என கூறிவிட்டு செல்லூர் ராஜூ விறுவிறுவென காரில் ஏறி புறப்பட்டார்.

Related Stories: