தம்பதியை தாக்கி நகை கொள்ளை

புழல்: சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயன் (70).  இவரது மனைவி மகேஸ்வரி (68). இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். விஜயன் கட்டிட தொழிலாளி. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் இவர்கள் தூங்கியபோது திறந்து கிடந்த வீட்டுக்குள் 3 மர்ம ஆசாமிகள் திடீரென  புகுந்துள்ளனர். இதில்,  மகேஸ்வரி கழுத்தில் கத்தியை வைத்து பீரோவில் இருந்த நகைகளை எடுக்கச் சொல்லி மிரட்டி உள்ளனர்.

இதை தடுக்க வந்த கணவர் விஜயனை மூன்று மர்ம நபர்களும் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கி உள்ளனர். பின்னர் மகேஸ்வரி அணிந்திருந்த   தாலி சரடு, இரண்டு நெக்லஸ் உள்ளிட்ட 10 சவரன் நகைகள்,  ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பித்து சென்றுவிட்டனர். தகவல் அறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  காயமடைந்த  விஜயனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: