உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும்: ரஷ்யா எச்சரிக்கை..!

மாஸ்கோ: உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கும் போர் டாங்கிகள் எரிக்கப்படும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே  கடந்த பிப்ரவரி மாதம் 24ந் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, துருக்கி போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனிடையே ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை உக்ரைனுக்கு வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய ரஷ்ய அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்; அமெரிக்கா உக்ரைனுக்கு ஆப்ராம்ஸ் போர் டாங்கிகள் வழங்குவது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், மற்ற ஆயுதங்களை போலவே இந்த டாங்கிகளும் எரியும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: