வட மாநில நபரை தாக்கி செல்போன் பறித்த 3 நபர்கள் கைது

பெரம்பூர்: பிரேம் ரானா சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் கடந்த ஐந்து மாதங்களாக புரசைவாக்கம் பகுதியில் தங்கி தனியார் ஸ்டோரில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் சிக்கன் ரைஸ் வாங்குவதற்காக புரசைவாக்கம் அரசு கூர்நோக்கு இல்லம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த மூன்று நபர்கள் இவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்தபோது பிரேம் ரானா செல்போனை கொடுக்காமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த மூன்று பேரும் கீழே இருந்த கற்களை எடுத்து அவரைக் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து ஓட முயற்சி செய்தனர் அப்பொழுது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தப்பி ஓடிய  மூன்று  நபர்களில் ஒருவரை துரத்தி பிடித்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தார்.

விசாரணையில் அந்த நபர் சென்னை ஓட்டேரி பழையவாழைமா நகர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் 21 என்பது தெரிய வந்தது. காயம் அடைந்த பிரேம் ராணா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலான தனிப்படை போலீசார் படிப்பட்ட ஆகாஷிடம் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார் என்கின்ற பேனா 19 மற்றும் கிருஷ்ணகுமார் என்கின்ற சுபாஷ் 22 ஆகிய இரண்டு பேரையும் நேற்று அதிகாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த தலைமைச் செயலக காலனி குடியிருப்பு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: