×

சாணி மெழுகிய வீட்டை கதிர் வீச்சு பாதிக்காதாம்: குஜராத் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

வியாரா,குஜராத்: குஜராத்தில் பசு மாடுகளை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கடும் சட்டவிதிகள் உள்ளன. இதனை மீறி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு பசு, காளை மாடுகளை கடத்தி சென்ற 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சமீர் வியாஸ் தீர்ப்பளித்தார். கடந்த 2022 நவம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த தண்டனை விவரம் தற்போது வௌியாகி உள்ளது. பசுக்களை வெட்டுவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், “பசு ஒரு விலங்கு மட்டுமல்ல. அது நமது தாய். அதை வதைப்பது சரியல்ல. பசுவின் கோமியம் தீராத பல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது.

பசுஞ்சாணத்தால் மெழுகிய வீடுகளை அணுக்கதிர் வீச்சு பாதிக்காது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே சிந்தாத நாளில்தான் உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பசு பாதுகாப்பு பற்றி தொடர்ந்து பேசினாலும் அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் இங்கு பசுவதை குறையவில்லை. இது ஒரு பண்பட்ட சமூகத்திற்கு அவமானம்” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gujarat , Radiation will not affect Chani waxed house: Gujarat court judge verdict
× RELATED வினாத்தாள் வெளியானது குஜராத் அரசு தேர்வு ஒத்திவைப்பு