×

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி: தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங்குடன் முதலிடம்..!

இந்தூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வென்றது. இந்தியா வந்துள்ள  நியூசிலாந்து அணி தலா 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள்,டி20 தொடர்களில் விளையாடி வந்தது. ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களையும் இந்திய அணி வென்றதுடன் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரையும் கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று மதியம் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி  50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 101 ரன்களும், சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களும் குவித்தனர். தொடர்ந்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் டெவோன் கான்வே 138, ஹென்றி நிக்கோலஸ் 42, மிட்செல் சான்ட்னர் 34 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி வீரர்கள் ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட், யஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 எனக் கைப்பற்றி, நியூசிலாந்தை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது. தரவரிசையில் இந்தியா 114 ரேட்டிங் உடன் முதலிடம் பிடித்துள்ளது.


Tags : New Zealand ,India , The Indian team whitewashed the New Zealand team: India ranked first with 114 rating..!
× RELATED நியூசிலாந்தில் கனமழை ஏர்போர்ட்டில் வெள்ளம்: நீச்சலடித்து தப்பிய பயணிகள்