×

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னை: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ  மூலம் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோ ரெயிலின் 2ம் கட்ட திட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தவழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டபாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக ஆர்.டி.ஐ  மூலம் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்துள்ளது. அதில் கூறியதாவது; சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது கிளாம்பாக்கம் வரை 15 கி.மீ நீளம் மற்றும் 12 உயர்மட்ட ரயில் நிலையத்துடன் ரயில் பாதை அமைக்க ரூ.4,625 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, ஒசூரிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chennai Airport ,Klambakkam Bus Stand , Approval to extend Metro Rail service from Chennai Airport to Klambakkam Bus Stand: Work to start soon
× RELATED மருத்துவ சிகிச்சைக்காக சகோதரருடன்...