ஹெல்த்தி ஜூஸ்...

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஏதேனும் குளிர்பானங்களைத் தேடி நம் நாக்கு தவிக்கத்தான்போகிறது. கண்டகண்ட குளிர்பானங்களை குடிப்பதைவிட, உடலுக்கு நலம் தரும் சில ஜூஸ் வகைகளை முயற்சித்துப் பாருங்களேன்...

முருங்கைக்கீரை ஜூஸ்

தேவையானவை:

முருங்கைக்கீரை - 1 கப்,

மிளகு - 5,

சீரகம், - 1 டீஸ்பூன்,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

இந்துப்பு,

பனங்கற்கண்டு - தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக் கீரையுடன் மிளகு சீரகம், எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி ஜூஸ்

தேவையானவை:

செம்பருத்திப்பூ - 4,

பன்னீர் ரோஜா 2,

பனங்கற்கண்டு அல்லது தேன்  சிறிதளவு,

எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் - 1 கப்.

செய்முறை:

செம்பருத்தி, ரோஜா இதழ்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் சேர்த்துக் கலந்து பருகலாம்.

கீழாநெல்லி ஜூஸ்

தேவையானவை:

கீழாநெல்லி இலை - 1 கைப்பிடி,

கொத்தமல்லித் தழை,

பனை வெல்லம்  சிறிது,

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்,

இந்து உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்துப் பருகலாம்.

வாழைத்தண்டு - வெள்ளரி ஜூஸ்

தேவையானவை:

வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) 1 கப்,

வெள்ளரித் துண்டுகள் ½ கப்,

எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,

பனங்கற்கண்டு- தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பிறகு, வடிகட்டிப் பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாக தேனும் பயன்படுத்தலாம்.

- என்.யுவதி

Related Stories: