கோடை கால குறிப்புகள்

நன்றி குங்குமம் டாக்டர்

கோடை காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள் இவை. முயற்சியுங்கள்...

சுகாதாரம்

வெயிலின் காரணமாக அதிக வியர்வை வெளியேறுவதால், தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற கோடைகால நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. ஆரோக்கியமான தனிப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது இந்த அபாயத்தைக் குறைத்து, பருவத்தில் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

நீரேற்றம்

கோடையில் போதுமான தண்ணீர் பருகி உங்கள் உடலை நீரேற்றமாக(Hydrated) வைத்திருப்பது முக்கியம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஒவ்வொரு நாளும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீரை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுதலாக, குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பருவகால உணவு

பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. கோடைக்காலம் என்றால் மாம்பழம், ப்ளம்ஸ், தக்காளி, தர்பூசணி, பெர்ரி, ஆரஞ்சு, செலரி போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்வது. இவை உங்கள் உடலை சீசன் முழுவதும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஓய்வும் அவசியம்

வெயில் என்பதால் வேலையையோ, பயணத்தையோ தவிர்க்க முடியாதுதான். அதுபோன்ற சூழலில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது ஓய்வெடுப்பது நல்லது.

ஐஸ் பேக்குகள் மற்றும் சன்ஸ்கிரீன்

ஹீட் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்படும் போது ஐஸ் கட்டிகள் விரைவான வலி நிவாரணிகளாகும். தவிர, SPF-அடிப்படையிலான சன்ஸ்கிரீன் அல்லது பாடி லோஷனைப் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளி மற்றும் தோல் சேதத்தைத் தவிர்க்கவும்.

கை கழுவும் முறை

நாள் முழுவதும், குறிப்பாக உணவை சமைப்பதற்கு அல்லது சாப்பிடுவதற்கு முன், லேசான சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் கைகளை பல முறை கழுவவும். மேலும், சமைக்கப்படாத அல்லது பச்சையான உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

தடுப்பூசி

உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ நோய்த்தடுப்பு ஊசி போடவும். அம்மை மற்றும் சளிக்கு தடுப்பூசி போடுங்கள்.

பாதுகாப்பு

சூரிய ஒளி தவிர்க்க முடியாதது. ஆதலால் உங்கள் சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க தொப்பி மற்றும் சன் கிளாஸ்களை அணியுங்கள்.                   

Related Stories: