×

பல் வலிமைக்கு விளாம்பழம்

நன்றி குங்குமம் தோழி

* பல வியாதிகளைக் குணப்படுத்தும் சிறந்த பழமாகும்.

* இதில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் உள்ளது.

* ஆயுளை நீட்டிக்கச் செய்யும்.

* நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

* நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* எலும்புகளுக்கு பலம் ஏற்படும்.

* ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும்.

* வயதானவர்கள் இதனை உண்டால், அவர்களுக்கு ஏற்படும் ‘ஆஸ்டியோ பொரோஸிஸ்’ என்னும் எலும்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப் பார்க்காது.

* பற்கள் கெட்டிப்படும்.

* ரத்தத்தை விருத்தியடையச் செய்யும்.

* சீதபேதி குணமடையும்.

* இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும்.

* பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.

* தலைவலி, கண் பார்வை மங்கல், மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை-கால்களில் அதிக வியர்வை இவைகளை சரிப்படுத்தும்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்