×

கொழுத்தவருக்குக் கொள்ளு

நன்றி குங்குமம் தோழி

* கொள்ளு அற்புதமான உணவு. குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளுதான். வேகத்திற்கும், வீரிய சக்திக்கும் கொள்ளு மிகச்சிறந்த உணவாகும். குதிரை கொஞ்சம்கூடக் களைப்படையாமல் எத்தனையோ கிலோ மீட்டர் தூரம் ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் இந்தக் கொள்ளுதான்!

* கொள்ளில் வைட்டமின் ஏ, பி1, பி2, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை போதுமான அளவு உள்ளன. இதில் நார்ச்சத்தும், புரதச்சத்தும் அதிகமாக இருப்பதால்,
கொஞ்சம் சாப்பிட்டாலே போதும்.

* கொள்ளுப் பருப்பைக் கடைந்து, சாப்பாட்டில் கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிட்டுப் பாருங்கள். அதனுடைய ருசியே அலாதியாக இருக்கும். கொள்ளு ரசம்
உங்களுக்குச் சக்தியை ஊட்டும்.

* அடைக்கு மாவிற்கு ஊறப்போடும்போது, பருப்புடன் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி கொள்ளு சேர்த்து ஊறப் போடவும். அடை மிருதுவாக இருக்கும்.

* உங்களுக்குக் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளதா? கவலைப்பட வேண்டாம். கொள்ளுச் சட்டினியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள இட்லிப்பொடி, மிளகாய்ப்பொடி வறுக்கும்போது ஒரு தேக்கரண்டி அளவுக்குக் கொள்ளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். சுவையாக இருக்கும். கொள்ளை வேக வைத்துச் சுண்டல் போலவும் சாப்பிடலாம்.

* கொள்ளை வேக வைத்து அதிலிருந்து வடிகட்டிய சாற்றைக் குடித்து வந்தால் ரத்த விருத்தி உண்டாகும். வயிற்றுவலி மறையும். சர்க்கரை வியாதிக்காரர்கள் கொள்ளுச் சட்டினி, கொள்ளுப் பருப்பு ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் இருக்கும்.

* எடை அதிகரிக்காமலிருக்க, கொலஸ்ட்ரால் பிரச்னைக்கு முடிவு கட்ட, தினந்தோறும் கொள்ளை உணவில் சேர்த்து வந்தால், வியக்கத்தக்க மாற்றத்தை காண்பீர்கள்.

* பெண்களுக்கு உண்டாகும் மார்பகப்புற்று நோய்க்குக் கொள்ளு சிறந்த மருந்தாகும்.பல வகையிலும் மருந்தாகப் பயன்படும் கொள்ளை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொண்டு பலனைப் பெறுங்கள். கொள்ளு இருக்கப் பயமேன்?

தொகுப்பு: சுருணிமகன், தாராபுரம்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்