கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல்

பக்குவம்

கடாயில் இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு, ஜவ்வரிசியை வறுத்து எடுத்து பின்னர் அதே கடாயில் பயத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு உடைத்த முந்திரி, உலர்திராட்சை, உடைத்த பாதாம் ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் பால், கரும்புச்சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பயத்தம்பருப்பு, ஜவ்வரிசியை சேர்த்து நன்கு கிளறி குறைந்த தீயில் வைத்து மூடவும்.

ஏழு நிமிடங்கள் கழித்து வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, பொடித்த ஏலக்காய் எல்லாவற்றையும் நன்கு கலந்து, மீதமுள்ள நெய்யைவிட்டு மூடி, வெயிட் போட்டு, ஐந்து நிமிடங்கள் `சிம்’மில் வைத்து இறக்கினால், சுவையான கரும்புச்சாறு ஜவ்வரிசி பொங்கல் தயார். வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கலைவிட கரும்புச்சாறு பொங்கலின் சுவை கூடுதலாக இருப்பதுடன், நீரழிவாளர்களுக்கும் உகந்தது.

Related Stories: