×

ஐஸ் கிரீம் சுய்யம்

பக்குவம்:

ஐஸ்கிரீமை சிறு உருண்டைகளாக ஃப்ரிட்ஜில் உள்ள ஐஸ் ட்ரேயில் வைத்து கட்டிகள் போல தயாரித்துக்கொள்ள வேண்டும். அதாவது இளகிய கட்டிபோல சிறு துண்டாக இறுகி இருக்க வேண்டும். மைதா, சாமை அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து சிறிதளவு பால்  சேர்த்து பஜ்ஜி  பதத்திற்கு தயார் செய்துகொள்ள வேண்டும். வெல்லத்தை பாலுடன் சேர்த்து கரைத்து தனியாக வடிகட்டி கொள்ளலாம். இந்த கலவையில் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

தனியாக தேங்காய் எண்ணெயை வாணலில் காய வைத்து ஐஸ்கிரீம் கட்டிகளை  ஒவ்வொன்றாக எடுத்து  தயாரித்துள்ள மாவில் முக்கி  சூடான எண்ணெயில் போட்டு எடுக்க வேண்டும். பத்து வினாடிகள் இருந்தாலே போதும் மாவு வெந்து விடும். அதைத் தாண்டும் போது ஐஸ்கிரீம் கட்டிகள் உருக ஆரம்பித்துவிடும். அதே போல ஒவ்வொரு முறையும் ஐஸ்க்ரீம் கட்டிகளை உருகாமல் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுஷ்யம் செய்ய பயன்படுத்த வேண்டும்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!