திருவாதிரைக்களி

செய்முறை :

வெறும் வாணலியில் அரிசி, பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்து ரவை பதத்திற்கு உடைக்கவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு முந்திரியை வறுத்துத் தனியே வைக்கவும். 4 கப் நீர் விட்டு வெல்லத்துருவல், தேங்காய் துருவல் சேர்த்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் உடைத்து வைத்துள்ள ரவையைச் சேர்க்கவும். இடை இடையே மீதியுள்ள நெய்யைச் சேர்க்கவும். மூடி வைக்கவும். இடை இடையே திறந்துக் கிளறிவிடவும். களி வெந்ததும் ஏலப்பொடி தூவி, வறுத்துவைத்துள்ள முந்திரியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். சுவையான களி தயார்.