கம்பு கொழுக்கட்டை

செய்முறை:

கம்பை குறைந்தது மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் ஒரு சுத்தமான துணியில் பரப்பி வைக்கவும். தண்ணீர் உறிஞ்சியவுடன், மிக்சியில் கரகரப்பாக அரைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு,  உளுத்தம்பருப்பு,பெருங்காயம், கருவேப்பில்லை தாளிக்கவும். பச்சை மிளகாய், தேங்காய், கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 1 & 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து, கொதிக்க விடவும். கொதி வந்தவுடன், அரைத்த கம்பு மாவு சேர்த்து, மிதமான தீயில் மூடி வேக வைக்கவும்.

4 நிமிடம் வெந்தவுடன், ஆற வைக்கவும். மூடி வைத்தால் காய்ந்துபோகாமல் இருக்கும்.  வெதுவெதுப்பாக ஆனவுடன் கைகளில் நல்லெண்ணெய் தடவி, பிடி கொழுக்கட்டைகளாக பிடிக்கவும் ஒரு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும். எப்பொழுதும் மூடி வைத்தால் காய்ந்து போகாமல் இருக்கும்.

Related Stories: