×

வேர்க்கடலை பக்கோடா

செய்முறை

முதலில் வேர்க்கடலையை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு மற்றும் வரமிளகாயை நீரில் போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வேர்க்கடலை பக்கோடா ரெடி.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!