மினி சாக்கோசங்க்ஸ் குக்கீஸ்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். பிறகு அதில் சர்க்கரையை சேர்த்து க்ரீம் பதத்திற்கு மீண்டும் நன்றாக பீட்டர் கொண்டு கலக்கவும். இந்த வெண்ணெய் சர்க்கரை கலவையில், ஒரு முட்டையையும் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அதில் டார்க் சாக்லேட் சேர்த்து லேசாக மீண்டும் கலக்கவும். கடைசியாக மாவு, உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து அந்த கலவையை நன்றாக கிளரவும். பிசைந்த மாவை ஃப்ரிட்ஜுக்குள் ஒரு 15-20 நிமிடங்கள் வரை வைக்கவும். இந்த நேரத்தில், அவனை (oven) 200-250 டிகிரி செல்சியஸ் வரை முன்கூட்டியே சூடேற்றிக்கொள்ளவும் (pre heat).

சுமார் 20 நிமிடங்கள் கழித்து, வெளியே எடுத்த மாவை, ஒரு பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து அதன் மேல் வெண்ணெய் அல்லது நெய் தடவி, குக்கீஸ் மாவினை சிறிய பந்துகளாக உருட்டி லேசாக அழுத்திக்கொள்ளலாம். குக்கீஸ் கலவைக் கொண்ட பேக்கிங் ட்ரேயை அவனில் வைத்த, 7-10 நிமிடங்களில் பேக் செய்யலாம். குக்கீஸ் ஆறியவுடன், சாப்பிட தயாராகிவிடும். உங்கள் ருசிக்கு ஏற்ற விதத்தில் சர்க்கரை மற்றும் சாக்லேட் அளவுகளை மாற்றிக்கொள்ளலாம். குக்கீஸ் கட்டர்களில் பல வடிவங்கள் உள்ளன. அதன் மூலம் விரும்பிய வடிவத்தில் குக்கீஸினை வடிவைமத்து பேக் செய்யலாம்.

Related Stories: