×

ஓட்ஸ் வெஜ் சூப்

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ், குடைமிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி, ஓட்ஸ் நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அப்போது ஓட்ஸில் உள்ள நீரானது முற்றிலும் வற்றியதும், அதில் பால் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக தேவையான அளவு உப்பு, உலர்ந்த கற்பூரவள்ளி இலை, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி ஒருமுறை கிளறி இறக்கினால், ஓட்ஸ் சூப் ரெடி!!!

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்