சில்லி பாயின்ட்...

* வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அடிலெய்டில் நடக்கும் 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 511 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கவாஜா 62, லாபுஷேன் 163, ஹெட் 175, கேரி 41* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்துள்ளது.

* கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகிகளே பந்தை சேதப்படுத்தும் செயலை ஊக்குவித்ததாக வார்னரின் மேலாளர் கூறியிருப்பது, புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

* எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு திறம்பட விளையாடும் வீரராக உருவாக விரும்புகிறேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

* பாங்காக்கில் நடக்கும் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரில், ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்செல்சனுடன் (டென்மார்க்) நேற்று மோதிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தினார்.

* வங்கதேச அணியுடன் இன்று நடக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கேப்டன் ரோகித், பந்துவீச்சாளர்கள் குல்தீப் சென், தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* புவனேஸ்வரில் நடக்க உள்ள உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடருக்காக (2023 ஜன. 13-29), கலிங்கா ஸ்டேடியத்தில் புதிதாக 4 மைதானங்கள் உள்பட மொத்தம் 6 செயற்கைப் புல்தரை மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: