2வது டெஸ்ட்: இந்தியா ஏ அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது

சில்ஹெட்: வங்கதேச ஏ அணியுடனான 2வது டெஸ்டில் (4 நாள் போட்டி), இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. சில்ஹெட் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்ட்டியில், டாஸ் வென்ற இந்தியா ஏ முதலில் பந்துவீச... வங்கதேசம் ஏ முதல் இன்னிங்சில் 252 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாகிர் ஹசன் 46, ஷகாதத் உசேன் 80, ஜாகெர் அலி 62 ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 6, ஜெயந்த், உமேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 562 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் ஈஸ்வரன் 157, புஜாரா 52, ஸ்ரீகர் பரத் 77, ஜெயந்த் 83, சவுரவ் குமார் 55, நவ்தீப் 50*, முகேஷ் 23* ரன் விளாசினர். 310 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வங்கதேசம் ஏ அணி, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 187 ரன்னுக்கு சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 123 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா ஏ பந்துவீச்சில் சவுரவ் குமார் 6, உமேஷ், நவ்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா ஏ 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

Related Stories: