முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடம்

புதுடெல்லி: முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடம் இருப்பதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. மக்களவையில் நேற்று ஒன்றிய  சுகாதார துறை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பேசுகையில், ஒன்றிய அரசின்  கையிருப்பில் உள்ள கொரோனா தடுப்பூசிகள் எதுவும் வீணாகவில்லை.  தடுப்பூசிகள் விரையம் ஆகாமல் இருக்க தடுப்பூசிகளின் காலாவதி தேதி போன்ற  விவரங்களை அரசு தொடர்ந்து பராமரித்து வருகிறது என்று கூறினார்.

5 ஜி சேவை: நாட்டில்  உள்ள 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5 ஜி  தொலைதொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது என்று தொலை தொடர்பு துறை அமைச்சர்  தேவுசிங் சவுகான் மாநிலங்களவையில் தெரிவித்தார்.

முப்படைகளில்  காலியிடங்கள்:  ராணுவம்,  கடற்படை, விமான படைகளில் மொத்தம் 1.35 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது  என பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட் மக்களவையில் நேற்று  தெரிவித்தார்.

பாரம்பரிய விளையாட்டுகள்: பாரம்பரிய விளையாட்டுகள்  சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் என்றும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள்  நாடு முழுவதும் 1000 கேலோ இந்தியா மையங்கள் திறக்கப்படும் என விளையாட்டு  துறை அமைச்சர் அனுராக் தாக்குர் மக்களவையில் நேற்று கூறினார்.

Related Stories: