×

சோனியா பிறந்த நாள்:பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி:  சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று 76வது பிறந்த நாள். இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்போரில் தனது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா ஆகியோருடன் அவர் பிறந்த நாளை கொண்டாடினார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  கார்கே டிவிட்டரில் பதிவில்,  சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது கருணை, அர்ப்பணிப்பு, வெல்ல முடியாத தலைமை, கண்ணியம், தைரியம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை லட்சக்கணக்கானோருக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags : Sonia ,PM Modi , Sonia's Birthday: PM Modi Wishes
× RELATED மக்களவை தேர்தலுக்கு முன் காங்கிரஸ்...