×

குமரியில் கடல் உள்வாங்கியது

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் இரவு 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் இருந்த  பாறைகள் மற்றும்  மணல்திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் கடலில்  கால் நனைக்க அச்சம் கொண்டனர்.

கன்னியாகுமரி  திரிவேணி சங்கமம்  கடல் பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம்  தாழ்வாக இருந்தது. அலை இல்லாமல்  கடல் குளம் போல் காட்சி தந்தது. கடலில் யாரும்  இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரிக்கை செய்ய வண்ணம் இருந்தனர்.

Tags : Kumari , Kumari was absorbed by the sea
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...