திருப்பதியில் ஜனவரி மாத தரிசனம்: ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12ம்தேதி ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜனவரி மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி ஆன்ைலனில் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் கல்யாண உற்சவம், டோல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 12ம்தேதி மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதேபோல், எலக்ட்ரானிக் குலுக்கலில் கலந்து கொள்ள சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்கு 12ம்தேதி காலை 10 மணி முதல் 14ம்தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் தங்கள் ஆதார் விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். 14ம்தேதி மதியம் 12 மணிக்கு குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். இந்த தகவல் பெற்றவர்கள் 2 நாட்களுக்குள் டிக்ெகட்டுகளை ஆன்லைனில் பணம் செலுத்தி பெறலாம். ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு மற்றும் 2ம்தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதனால் 11 நாட்கள் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம்தேதி முதல் 31ம்தேதி வரையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது. எனவே, பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தாங்கள் விரும்பும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஐபி டிக்கெட் விற்றவர் கைது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 6 பேர் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் இந்த டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்திற்கு வாங்கி வந்தது தெரிய வந்தது. அவை போலி என்பதும், திருமலையில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகரிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்த ஹரி என்பவர், நந்திகம எம்எல்ஏவின் சிபாரிசு கடிதத்தின் பேரில் 6 விஐபி தரிசன டிக்கெட்டுகளை ரூ.18 ஆயிரத்துக்கு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து ஹரியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Related Stories: