×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்காக 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்காக 50 விடுதிகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணத்திற்கு உருகொடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2022–2023 – ஆம் ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத் தொடரில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் பொருட்டும் 25 விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழியில் படிப்பதற்கு ஏதுவாக 25 விடுதிகளில் இணையவழி நூலகங்கள் (e-Library) என மொத்தம் 50 விடுதிகளில் ரூ.70.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகங்கள் அமைக்கப்படும்.

மேற்படி அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் (25 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் (Manual Library) + 23 ஆதிதிராவிடர் நல விடுதிகள் + 2 பழங்குடியினர் நல விடுதிகளில் (e – Library)) நூலகங்களை அமைக்க நிருவாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.69,95,850 (ரூபாய் அறுபத்தொன்பது இலட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரத்து எண்ணூற்று ஐம்பது மட்டும்) ஒப்பளிப்பு செய்து அரசாணை (நிலை) எண். 112, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந4(2)) துறை, நாள். 24.11.2022-இல் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.


Tags : Aditravidar ,Aboriginal Welfare College ,Minister ,Kayalvinhi Selvaraj , New libraries will be set up in 50 hostels at a cost of Rs 70 lakh for students staying in Adi Dravidar and tribal welfare college hostels: Minister Kayalvizhi Selvaraj
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...