×

மாண்டஸ் புயல் காரணமாக காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்கபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் மின்விநியோகம் வழங்கப்படும். புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது ,காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags : Cyclone Mandus to cause power outages due to wind speed: Power advisory
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்