மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 16 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரைக்கு செல்லும் சிறிய ரக விமானங்கள் ரத்து செய்யபட்டது.

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பலத்த சூறைக்காற்ற்ய் வீசும்போது சிறிய ரக விமானங்கள் பறந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதற்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, மைசூரு, கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹீப்ளி, கண்ணூர் எனப்படும் 72 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் என்னும் சிறிய வகை விமானங்கள் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில விமானங்கள் தொடர்ச்சியாக காற்றின் வேகம் மற்றும் மழையின் அளவு அதிகரித்தால் சில விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: