இன்று 76வது பிறந்த நாள்: சோனியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எதிர்வரும் ஆண்டு அவருக்கு மகிழ்ச்சியான நலமான ஆண்டாக அமைய விழைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும் தொலைபேசி வாயிலாகவும், சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: