மனித உரிமை செயல்பாடு தடையை நீக்க வேண்டும்: செங்கை பத்மநாபன் வலியுறுத்தல்

சென்னை: நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கை: உலகமே மனித உரிமை இயக்கங்களின் செயல்பாட்டை ஆதரிக்கும்போது, தமிழகத்தில் மட்டும் ஏன் தடை. தவறான முறையில் செயல்படும்  இயக்கங்கள், தனிநபர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக கடந்த அதிமுக ஆட்சியில் மூட்டை பூச்சிக்கு அஞ்சி வீட்டை தீமூட்டுவது எவ்வளவு தவறோ அவ்வளவு பெரிய தவறு மனித உரிமை இயக்கங்களின் மீதான தடை.  

இது மிகப்பெரிய மனித உரிமை மீறல். விலங்குகளுக்குகூட குரல் கொடுக்க பல இயக்கங்கள் இருக்கும் நிலையில் ஏனோ இங்கு மட்டும் தடை.  தடையை நீக்க முதல்வரை கேட்டு கொள்கிறேன். வரும் 10ம் தேதி சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

Related Stories: