மேற்குவங்கமா? குஜராத்தா?: இடதுசாரிகளின் சாதனையை முறியடிக்க பாஜக இன்னொரு தேர்தலில் ஜெயிக்கணும்!

அகமதாபாத்: மேற்குவங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை முறியடிக்க குஜராத்தில் பாஜக இன்னொரு முறை தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 1997ல் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து இடதுசாரி கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அம்மாநில முதல்வராக பதவியேற்ற ஜோதிபாசு, கடந்த 1977 முதல் 2000ம் ஆண்டு வரை முதல்வராக இருந்தார்.

ஜோதிபாசு மறைவுக்கு பின் புத்ததேவ் பட்டாச்சார்யா பதவியேற்றார்.  1977 முதல் 2006 வரை மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆட்சி இருந்தது. தொடர்ந்து 7 முறை ஆட்சியை கைப்பற்றிய இடதுசாரி கட்சிகள், 34 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் ஆட்சியில் இருந்தன.

ஆனால் தற்போது குஜராத்தில் 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றினாலும் கூட, 2027ம் ஆண்டு அரசின் பதவிக்காலம் முடிவடையும் போது 32 ஆண்டுகளை மட்டுமே  நிறைவு செய்ய முடியும். இன்னும் ஒரு முறை வெற்றி பெற்றால் மட்டுமே மேற்குவங்கத்தில் இடதுசாரி கட்சிகளின் சாதனையை  பாஜகவால் முறியடிக்கும்.

1995ம் ஆண்டில் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக, 1996 செப்டம்பர் 19ம் தேதி முதல் 1998 மார்ச் 4ம் தேதி வரை ஆட்சியில் இல்லை. அதனால் தொடர் வெற்றியில் இடைவெளி ஏற்பட்டது. இன்றைய இந்திய அரசியல் மேற்குவங்கம் மற்றும் குஜராத்தில் மட்டுமே மக்கள் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கே அதிக வாய்ப்பு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: